Monday, January 2, 2012

என் கவிதைச் சாலை !!!


சிவப்பு
வறுமையின் நிறம்
சிவப்பு
சிக்னலில் கையேந்தும்
பிச்சைக்காரன் !!!
















சுமங்கலி
ஹோலிப் பண்டிகையால்
சுமங்கலி ஆனாள்
வெள்ளை புடவையில்
சாயத்தின் பல வண்ணங்கள் !!




















வாழ்க்கை பயணம்

நீ தூக்கி எறிந்த டிக்கெட்டுக்களை
பயன்படுத்தியே
என் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன்...






















நிலவு
புழுதி காற்று அடித்ததால்
நிலவில் மழை
என்னவளின் இரு கண்கள் !!!



















அமாவாசை
பூமிக்கு மின்தடங்கள்
பராமரிப்பு பணியில் இருக்கிறதோ
நிலவு ??




















துடிப்பு
இதயம் துடிக்கையில்
கவனிக்க ஆளில்லை !!!
நின்று விட்டால்
எல்லோரும் துடிப்பார்கள் ????






















ஆழம்
ஒரு துளியில் கூட
ஆழம்!
தண்ணீர் அல்ல
கண்ணீர் ....
  





















மீதம்
எப்போது தருவாய் ?
பேருந்தில் உன்னை கண்டதால்
நான் இழந்த மீதத்தை ??




























குழிகள்
சிரிக்காமல் குழி விழுகிறது
எங்கள் ஊர்
சாலைகளில் !!



















மனது
அன்பே உன் கல் மனதை கொடு
எனக்கு
கல்லறை கட்ட !!!




*********************************************************************************